சர்வதேச அரசியல்

அரசியல் என்ற பதம் நலன்கள், மோதல்கள், அதிகாரம் ஆகிய மூன்று விடயங்களுடன் தொடர்புபட்டதாகும். அரசியலைச் சர்வதேச அரசியலுடன் தொடர்புபடுத்தும் போது சர்வதேச இறைமையுடைய அரசுகளின் நலன்கள் ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை. இறைமையுடைய அரசுகளின் நலன்கள் ‘தேசிய நலன்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன. இறைமையுடைய Continue Reading →

கூட்டுப்பாதுகாப்பு

கூட்டுப்பாதுகாப்பு என்ற எண்ணக்கரு சர்வதேச அரசியலில் “பேரம் பேசும் திறன்” என்பதற்குக் கிடைத்த முதல் வெற்றியாகும். ஒரு தேசம் அல்லது அரசு நீண்ட காலத்திற்குத் தனித்துச் செயற்படுவது அதனது பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தாது. பாதுகாப்பு என்பது ஒவ்வொரு அரசினதும் முதல் தேவையாகவே உள்ளது. Continue Reading →

பிராந்திய ஒருமைப்பாடு

பிராந்திய ஒருமைப்பாடு’ என்ற பதத்திற்கு மேற்கு ஐரோப்பாவிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களையும், அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு சர்வதேச அரசியலில் விளக்கமளிக்கப்படுகின்றது. ஒருமைப்பாடு’ என்ற பதம் வெவ்வேறு தேசிய அரசுகளின் எல்லைகளுக்கு அப்பால் சென்று, அரசியல் ஐக்கியத்திற்கான தேவையினை வலியுறுத்தி நிற்கின்றது. ஆயினும், Continue Reading →

அதிகாரச் சமநிலை

இறைமை போன்று அதிகாரமும் சர்வதேச அரசியலில் முக்கியமான பதமாகும். ஒரு அரசு தனது தேசிய, சர்வதேசக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு அதிகாரத்தினையே பயன்படுத்துகின்றது. சர்வதேச அரசியலில் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அரசுகள் ஆக்கிரமிப்பிற்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகின்றன. இதனால் ஒவ்வொரு அரசும் தன்னை எல்லா வகையிலும் Continue Reading →

தேசிய நலன்

சர்வதேச அரசியலில் “தேசிய நலன்” என்ற பதம் மிகவும் முக்கியமானதாகும். ஆயினும் சர்வதேச அரசியலில் இப்பதத்தின் நடத்தையினை வியாக்கியானப்படுத்துவது மிகவும் சிக்கலானது என்பதை பொதுவாக எல்லா அரசியல் விஞ்ஞானிகளுமே ஏற்றுக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் சர்வதேச அரசியலில் தேசிய நலனை அடிப்படையாகக் Continue Reading →

சர்வதேசச் சட்டம்

சர்வதேச முறைமைகளில் உள்ளடங்கியுள்ள விடயங்களில் சர்வதேசச் சட்டமும் ஒன்றாகும். சர்வதேச முறைமையினுள் அரசுகள், சர்வதேச ஒழுங்கமைப்புக்கள், வெவ்வேறுபட்ட அரச ஸ்தாபனங்கள், சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் போன்ற பல பகுதிகள் உள்ளடங்கியுள்ளன. எனவே சர்வதேசச் சட்டத்தினைச் சர்வதேச முறைமைகளுக்கூடாக விளங்கிக் கொள்ள வேண்டும். Continue Reading →

ஆயுதக்கட்டுப்பாடும் ஆயுதக்களைவும்

ஆயதக்களைவு என்பது சர்வதேச அரசியலில் மிகவும் பிரபல்யமான ஒரு பதமாகும் பொதுவாக அரசுகள் ஆயுதங்களைக் குறைக்க விரும்பாததுடன் அவ்வாறான ஒரு எதிர்பார்ப்பினைக் கூட கொண்டிருப்பதுமில்லை. வழமையாக எல்லா அரசுகளும் ஆயுத பலத்தை வைத்திருக்கவே விருப்புகின்றன. ஆயுத பலம் இருந்தால்தான் தமது எல்லைப் Continue Reading →

வெளிநாட்டுக் கொள்கை

வெளிநாட்டுக் கொள்கை சர்வதேச அரசியற் செயற்பாட்டுக்கானதொரு பொறிமுறையாகும். எனவேதான் சர்வதேச அரசியலில் வெளிநாட்டுக் கொள்கை என்ற எண்ணக்கரு மிகவும் முக்கியமானதொரு இடத்தினைப் பெறுகின்றது. வெளிநாட்டுக் கொள்கை என்பது தேசியக் கொள்கையிலிருந்து வேறுபட்டதொன்றல்ல. உண்மையில் தேசியக் கொள்கையின் ஒரு பகுதியே வெளிநாட்டுக் கொள்கையாகும். Continue Reading →

யுத்தம்

மனித வரலற்றில் யுத்தம் இல்லாத காலப்பகுதியை அடையாளப்படுத்த முடியாது. பல்மர்,பெர்கின்ஸ் (Palmer and Perkins) ஆகியோர் “யுத்தத்தின் பயங்கரத்தினை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் தேவையற்றது. யுத்தம் எண்ணற்றோரின் வாழ்க்கையினை அழித்து ஒழித்திருப்பதுடன்,சாதாரண வாழ்க்கை சாத்தியமற்றது என்ற எண்ணத்தினையும்,மனிதன் இப்ப10மியில் வாழ்வது ஆபத்தானது என்ற Continue Reading →