நல்லாட்சியை ஏற்படுத்த முயற்சிக்கும் எல்.எல்.ஆர்.சி

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.03.29, 2014.03.30 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image001

அரசியல்வாதிகளின் செயற்பாடுகள், ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள்,காவல்துறையின் செயற்பாடுகள் தொடர்பாக உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிற்கு ஆணைக்குழு விஜயம் செய்த போது பொதுமக்கள் கருத்துக் தெரிவித்திருந்தனர். மேற்படிவிடயங்கள் தொடர்பில் தமக்கு பயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தண்டனைக்கு பயமற்ற ஒரு சூழல் உருவாகியுள்ளதால், ஆட்கடத்தல்கள், தவறான சிறை வைப்புக்கள், பலாத்காரமான பணம்; பறித்தல் போன்றன சர்வசாதாரணவிடயங்களாகின. இச்; சட்ட விரோத செயற்பாடுகளினால் மக்களின் வாழ்வுரிமை, அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டன. கடத்தப்பட்டவர்கள்; எங்கிருக்கின்றார்கள் என இன்னமும் தெரியாதுள்ளது. அதேநேரம் சிலர் இறந்துவிட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் உண்மையானவை என உறுதிப்படுத்தும் சந்தர்ப்பத்தில் இது மக்களின் அடிப்படைச் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை மீறும் செயல்களேயாகும். இந்நிலையில் இவைகளைக்கட்டுப்படுத்தி நாட்டில் நல்லாட்சியை உருவாக்க எல்.எல்.ஆர்.சி சில விடயங்களை பரிந்துரை செய்துள்ளது.

அரசியல்வாதிகளைப் புறந்தள்ளுதல்

உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னரும் சட்ட ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள் தொடருகின்றன. அரசியல்வாதிகளின் பக்கபலத்துடன் செயற்படும் ஆயுதக் குழுக்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பணம் பறித்தல், ஆட்கடத்தல், காணமல்போதல், கொள்ளை போன்ற குற்றச் செயல்களால் வடக்கு, கிழக்கு மாகாணமக்களின் மனதில் அச்சம் நிலவுகின்றது. பல அரசியல்வாதிகள் சட்டத்திற்கு கட்டுப்படாமல் செயற்படுகிறார்கள். குற்றவியல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய குழுக்;களுடன் அரசியல்வாதிகளுக்குத் தொடர்புள்ளதுடன், இக்குழுக்களைக் காப்பாற்ற காவல்துறை மீது முறையற்ற செல்வாக்கைப் பிரயோகிப்பதுடன், காவல்துறையினை அரசியல்மயமாக்கி நீதியை சீர்குலைக்கின்றனர்.

ஆயுதப்பாவனையுடன் கூடிய அரசியல் வன்முறைகள் கலந்த அரசியல் கலாசாரம் சட்டத்தை மதிக்கும் பொதுமக்கள் மத்தியில் அதிகளவு கவலையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் வன்முறைகளின் அதிகரிப்பு மற்றும் அரசியல்வாதிகளும் அவர்களுடைய ஆதரவாளர்களும் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்பதையும், பாவிப்பதையும் ஆணைக்குழு மிகுந்த கவலையுடன் நோக்கியுள்ளது. அரசாங்கம் சட்டவிரோதமான ஆயுதங்கள் வைத்திருப்பவர்களிடமிருந்து ஆயுதங்களை களையவும், அதுபோன்ற குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத் தொடரவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல்வாதிகளிடம் காணப்படும் பரஸ்பர ஒத்துழைப்பு இன்மை, பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு வெளிப்படையாகவே வன்முறைகளை நாடுவது என்பன தேசிய நல்லிணக்க செய்முறையை உருவாக்குவதில் தடைகளை ஏற்படுத்துகின்றது.

சிவில் நிர்வாக அதிகாரிகள் தமக்குள்ள அச்சத்தினால் அரசியல் தொடர்புள்ளவர்கள் செய்யும் குற்றங்களை விசாரணை செய்ய தவறுகின்றனர். மேலும் குற்றவாளிகளை அதற்குரிய பதிவுப் புத்தகத்தில் பதியாமல் விட்டு விடுகின்றனர். இவ்வாறான நடைமுறைகள் கட்டுப்படுத்தப்படாமல் விடப்படுமாயின் நல்லிணக்கத்தினை அடைவது சிரமமாகிவிடும்.

குறைகேள் அதிகாரியின் செயற்பாட்டை வலுவூ+ட்டுவதற்காக 1994ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 16ஆம் இலக்கச் சட்டத்திருத்தங்கள்; குறைகேள் அதிகாரியின் செயற்பாட்டிற்கு வலுவூட்டும் என எதிர்பார்க்கப்பட்ட போதும்; அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலிருந்து மீண்டெழக்கூடிய பொதுமக்களின் மனக்குறைகளை பயனுள்ள வகையில் தீர்த்து வைக்கத் தற்போதைய சட்டம் போதுமானதல்ல. சிவில் நிர்வாகத்தினை மேற்கொள்ளும் அரச ஊழியர்கள் மற்றும் ஏனைய தனி நபர்கள் மேற்கொள்ளும் அதிகாரத் துஷ்பிரயோகத்தினால் சகல மக்களுக்கும் குறிப்பாக சிறுபான்மை இனமக்களுக்கு ஏற்படும் மனக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் சுயாதீனமானதொரு பொதுச்சேவை ஆணைக்குழுவினை உருவாக்க வேண்டும்.இப்பொறிமுறை பயனுள்ள முறையில் அதன் செயற்பாடுகளைக் மேற்கொள்ள வசதியாக பலமான நிர்வாகப் புலனாய்வு பிரிவொன்றையும் உருவாக்க வேண்டும்.

ஆயுதக்களைவு

தென்னிந்தியாவில் இராணுவப் பயிற்சி பெற்ற டெலோ,புளொட், ஈ.பீ.ஆர்;.எல்.எப். ஈ.என்.டி.எல்.எப் போன்ற ஆயுதக்குழுக்களும் ரி.எம்.வி.பி ஆகிய ஆயுதக் குழுவும் பல துன்பங்களை தமிழ் மக்களுக்குக் கொடுத்துள்ளன. கடத்தல், கப்பம் கோருதல், கொலை, கொள்ளை போன்ற தலைமறைவு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன. இதனால் தமிழ் மக்களது வாழ்க்கை அச்சத்திற்கும்;, பதட்டத்திற்கும் உள்ளாகியது. இவ் ஆயுதக்குழுக்களின் தலைமறைவு நடவடிக்கைகளுக்கு அவசரகால சட்டவிதிகள் உதவியதுடன்,அவர்கள் அரசாங்கத்துடன் மறைமுகமாக இணைந்திருப்பதாக மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ரி.எம்.வி.பி மற்றும் ஈ.பி.டி.பி ஆகியவற்றிடன் இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆணைக்குழு விளக்கம் கேட்டபோது, தமது கட்சிகளுக்கு எதிராகச் சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், இனந்தெரியாத குழுக்களால் தங்களுடைய பெயர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஈ.பி.டி.பி தலைவர்; “ஒருவரையொருவர் அழிக்கின்ற கருணையற்ற கொலைகளை எல்.ரி.ரி.ஈ யினர் ஊக்குவித்தனர்.இதனால் சில தமிழ் குழுக்கள் ஆயுதங்களை வைத்திருந்தனர். எல்.ரி.ரி.ஈ யுடனான யுத்தம் முடிவடைந்தாலும் மீதி ஒரு சில நடவடிக்கைகள் சில காலம் காணப்படலாம். ‘கடும் மழையின் பின்னரும் தூவானம் காணப்படும்” என தெரிவித்துள்ளார்.

இக்கருத்துக்கள் துன்பப்படும் மக்களுக்கு சிறிய அல்லது எந்த ஆறுதலையும் வழங்கப்போவதில்லை. பதிலாக,அர்த்தம் மிக்க நல்லிணக்க செயன்முறைக்கு நேர் எதிரானதாகவே உள்ளது. சட்டவிரோத ஆயுதக் குழுக்களிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரித்து உண்மையினை கண்டறிவதற்கு சரியான விசாரணையொன்று மேற்கொள்ளப்படுவதுடன் குற்றம் புரிந்தமைக்கு போதுமான ஆதாரங்கள் காணப்படுமிடத்து குற்றவாளிக்கெதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும் என ஆணைக்குழு கருத்து தெரிவித்துள்ளது.

ஆயுதங்களை களைவதற்கும் இந்தக் குழுக்களின் சட்ட விரோத நடவடிக்கைகளை நிறுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.அவ்வாறு செய்யாதுவிடின் இது தற்போது இடம்பெற்றுவரும் நல்லிணக்கச் செயல்;முறையில் கடுமையான தாக்கத்தினையும் ஏற்படுத்தும். இவ் விடயம் தொடர்பாக ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையில் தெரிவித்த சட்ட விரோத ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை பறிக்கும் நடவடிக்கையினை மீண்டும் உறுதியாக வலியுறுத்தியுள்ளது. அதேவேளை சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதனை ஆணைக்குழு கவனத்தில் கொண்டாலும், முடிவான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது கவலைக்குரிpயதாகும் எனத் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட கால வரையறையினுள் உறுதிப்படுத்தக் கூடிய செயன்முறையுடன் இந்த விடயத்தினைக் கையாள்வதற்கு முடிவான நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பது முக்கியமானதாகும்.

காவல்துறை சுதந்திரம்;

விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், சட்ட நுணுக்கங்களை அணுகுவதற்கும் போதுமான வசதிகள் மாகாணங்களில் பணியாற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் பெரும் எண்ணிக்கையான விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளது. மேலும் பாரதூரமான குற்றங்களைப் புரிந்த நபர்கள் இக்குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள வழி கிடைத்துள்ளது. இதனால், குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் விரக்தி ஏற்பட்டுள்ளது. எனவே இவற்றைச் சீர்படுத்தி காவல்துறையினை வழிநடத்தவும், ஆலோசனை வழங்கவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உப பிரிவுகளை மாகாணங்களில் உருவாக்க வேண்டும்.

சட்டத்தையும் ஒழுங்கையும்; பேணுவதற்கான பொறுப்புள்ளதொரு சிவில் சேவை சார்ந்த நிறுவனமே காவல்துறையாகும். எனவே நாட்டின் பாதுகாப்பிற்கு பொறுப்பாகவுள்ள முப்படைகளுடன் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து காவல்துறை பிரிந்திருப்பது விரும்பத்தக்கதாகும்.

காவல் துறையின் பயனுள்ள செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கும் பொதுமக்களிடையே நம்பிக்கையை உருவாக்குவதற்கும் நிலையான சுயாதீன காவல்துறை ஆணைக்குழு அவசியமாகும். இவ் ஆணைக்குழு, காவல்துறைப் பணியின் செயற்பாட்டை கண்காணிப்பதற்கும், காவல்துறை அலுவலர்கள் சுயாதீனமாக செயற்படுதல், மற்றும் மிக உயர்ந்தளவு துறைசார் நடத்தையை பேணுதல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்குமான அதிகாரத்தினைக் கொண்டிருத்தல் வேண்டும்.

நீதி நிர்வாகத்தில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமாயின், அரசியல் பலம் மற்றும் தொடர்புகளைக்; கவனத்தில் கொள்ளாது எல்லா குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்து குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும்.

வெளிப்படைத் தன்மை

சட்டங்கள்,விதிகள் மற்றும் ஒழுக்க நடத்தைக் கோட்பாடுகள் என்பவற்றால் அரச சேவையிலுள்ள ஒழுங்குமுறைகள் மற்றும் நடைமுறைகள் முறையாக வழிநடாத்தப்படுவது அவசியமாகும். இதன்மூலம் சகல பிரசைகளினதும், குறிப்பாக சிறுபான்மை மக்களினது நலன்கள் மற்றும் உணர்வுகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய செயற்பாடுகளைத் தடுக்க முடியும்.

மனக்குறையினை ஏற்படுத்தக்கூடிய தவறான கருத்துக்களை தடுப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக வெளிப்படைத் தன்மையுடன் மக்களுக்கு தகவல்கள் வழங்கப்படவேண்டும். இதற்காக தற்போதுள்ள நடைமுறைகள் மற்றும் செயன்முறைகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும். சட்டவாக்கத்தில் நீதித்துறை மறுசீரமைப்புக்கான அரசியல் யாப்பு சட்ட ஏற்பாடுகள் இல்லாதுள்ளது.

முன்மொழியப்படும் எந்தவொரு சட்டவாக்க நகலும் அரசியலமைப்பின் விதிகளுக்குட்பட்டதா என்பது குறித்து மேல் நீதிமன்றத்தின் முன்பாக பயனுள்ள வகையில் விவாதித்து நீதிமன்றத்தின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு பொதுமக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் அங்கத்தவர்களுக்குப் போதியளவு சட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

மேல் நீதிமன்றத்தில் முன்மொழியப்படும் சட்டவாக்க நகலானது அரசியல்யாப்பின் விதிக்குட்பட்டது என்று நீதிமன்றத்தின் ஆதரவைப் பெறுவதற்காக – குறிப்பாக அவசரமான சட்ட வரைவுகளுக்கான – அரசியல்யாப்பில் கொடுக்கப்பட்ட கால அவகாசம்; போதுமானதல்ல. அவசரமான சட்ட வரைவுகள் தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் அல்லது ஜனாதிபதியால் குறிக்கப்பட்ட திகதியிலிருந்து மூன்று நாட்களுக்குள் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்க வேண்டும் என அரசியலமைப்பு உறுப்புரை 122 (1) கூறுகின்றது.

முன்மொழியப்பட்ட சட்டவாக்கம் தொடர்பான பொதுமக்களின் தலையீடு ஒரு உணர்ச்சி பூர்வமான ஜனநாயகத்தின் முக்கியமானதொரு பகுதியாகும். எனவே முன்மொழியப்பட்ட சட்டவாக்கத்திற்கு எதிர்ப்பு இருக்குமாயின் அதனைக் கூறுவதற்குப் போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். இதற்;காக பொருத்தமான அரசியலமைப்பு திருத்தமொன்றைக் கொண்டு வருவதற்கான உடன்பாட்டை அடைவதற்கு அரசாங்கமும் எதிர்கட்சிகளும் தங்களாலான எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

நிலைத்திருக்கக்கூடிய நல்லிணக்கம், சமாதானம்

இலங்கையில் நடைபெற்ற முப்பது வருட உள்நாட்டு யுத்தத்தினால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அழிவுற்று அபிவிருத்தி, பொருளாதாரம்;, உட்கட்டமைப்பு என்பவற்றில் பின்னடைந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட இவ் இரண்டு மாகாணங்களிலும் ஏனைய பிரதேசங்களைப் போன்று பாரிய பொருளாதார, அபிவிருத்தித் திட்டங்களை உடனடியாக வரைந்து நடைமுறைப்படுத்த முடியாது என்பது உணர்பூர்;வமான விடயமாகும். முதலில் உள்நாட்டு யூத்தத்தினால் ஏற்பட்ட மனத்துயரங்களையும், பிரச்சினைகளையும் அடையாளம் காண்பதுடன், அவா;களின் மனக்குறைகளை கேட்பதும் அவசியமாகும். எதிர்காலத்தில் மோதலைத் தடுக்க வேண்டுமாயின் பல்லின சமூகங்களுக்கிடையில் நல்லெண்ணத்தினை உருவாக்கக்கூடிய பொறிமுறையினை உருவாக்க வேண்டும். இப்பொறிமுறையூ+டான தேசக்கட்டுமானத்தினை உருவாக்க சிறுபான்மை மக்களை நோக்கி அரசாங்கம் முன்நகரவேண்டும். இதற்குச் சமாந்தரமாகச் சிறுபான்மை மக்களும் அரசிலும், அரசாங்கத்திலும் தமக்கு இருக்க வேண்டிய பற்றுதலை (Patriotism) மீண்டும் உறுதியாக நிலைநிறுத்தவும், வெளிப்படுத்தவும் வேண்டும். உள்நாட்டு யுத்தமானது அரசியல் வன்முறை, இனப்படுகொலை மற்றும் அதனால் வழிநடாத்தப்பட்ட தீவிரவாதத்தினால் முழுமையாக ஆதிக்கம் செலுத்தப்பட்டதாகும். சிறுபான்மை மக்களின் மனக்குறைகளுக்கான தீர்வு மிகவும் தொலைவிலுள்ளது என்ற தெளிவான உணர்வு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்து சிறுபான்மை மக்கள் தொடர்பாக தனக்குள்ள பொறுப்புக்களை அரசாங்கம் புறக்கணித்து வருகின்றது என்ற மனக்கவலையும் சிறுபான்மை மக்களிடம் உள்ளது. இது அரசியல் பிரச்சினை என்பதால் இது அரசியல் ரீதியாகவே தீர்;க்கப்பட வேண்டும். எனவே இனமோதலின் மூலவேருக்கு தீர்வு வழங்குவது அவசியமாகும். இதற்குரிய முன்ஏற்பாடுகளை செய்யவேண்டியது அரசாங்கத்தின் பிரதான கடமையாகும். அதேநேரம் இதற்குச் சமாந்திரமாக பொதுமக்கள் இதற்கான தமது நல்லெண்ணத்தினை அரசாங்கத்திற்கு வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் நிலைத்திருக்கக்கூடிய சமாதானத்தையடைய முடியும்.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

14,725 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>